ஆப்நகரம்

அமெரிக்கா - ஈரான் பதற்றம்: ட்விட்டரை தெறிக்கவிடும் 3ஆம் உலகப்போர் அபாயம்

மூன்றாம் உலகப்போர் தொடர்பான மீம்ஸ்களையும் தெறிக்க விடும் ட்விட்டர் வாசிகள், #WWIII என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்

Samayam Tamil | 3 Jan 2020, 7:13 pm
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்
சென்னை: அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் ட்விட்டரில் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தையும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படையினர் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்படையினர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அதந்தொடர்ச்சியாக ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஹிஸ்புல்லா படையினர் சூறையாடினர். இந்த தாக்குதல்களுக்கான தண்டனையை ஈரான் எதிர்கொள்ளும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் மத்திய-கிழக்கு பகுதியில் 750 வீரர்களை நிலைநிறுத்தவும் ட்ரம்ப் உத்தரவிட்டார்.

ஈரானின் முக்கியத் தலைவரை, ஈராக்கில் கொலை செய்த அமெரிக்கா!

இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் ஆள் இல்லா விமானம் மூலம் இன்று அதிகாலை பாக்தாத் விமானநிலையம் அருகே நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் கீழ் இயங்கும் ஈரான் புரட்சிகர காவலர்கள் படையின் பிரிவான ஈரான் எலைட் குட்ஸ் படைத் தலைவர் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

ஹேஷ்டேக்


இதனிடையே, ஈரான் நாட்டில் இருக்கும் தங்களது நாட்டினர் உடனடியாக நாடு திரும்பவேண்டும் என அமெரிக்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். ஈரான் நாட்டிலுள்ள தூதரகத்தை அணுக வேண்டாம் எனவும் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.



அதேசமயம், ரான் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரமிக்க படைத் தளபதியாக பார்க்கப்பட்ட குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதற்கு மூன்று நாள் துக்க தினத்தை ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவை பழிவாங்கப்படும் என அந்நாட்டின் உட்சபட்ச அதிகாரம் படைத்த தலைவர் அயத்துல்லா காமெனி மற்றும் ஈரான் நாட்டி அதிபர் ஹசன் ரௌகானி ஆகியோர் எச்சரித்துள்ளணர். எனவே, ஈரான் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த விவகாரம் அமெரிக்கா - ஈரான் இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்குப்பகுதியில் மிகப்பெரிய பதற்றம் ஏறப்பட்டுள்ள நிலையில், இதனை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் மூன்றாம் உலகப்போர் குறித்த அபாயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அதுதொடர்பான மீம்ஸ்களையும் தெறிக்க விடும் ட்விட்டர் வாசிகள், #WWIII என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி