ஆப்நகரம்

பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள பிஜி நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

The Guardian 4 Jan 2017, 12:13 pm
சுவா: பசிபிக் பெருங்கடலின் தெற்கு கரையோரத்தில் அமைந்துள்ள பிஜி நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
Samayam Tamil fiji hit by magnitude 7 2 earthquake tsunami warning lifted
பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


சுமார் 300 தீவுகளை உள்ளடக்கிய பிஜி நாட்டின் தலைநகர் சுவாவில் இருந்து சுமார் 282 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில், 15 கி.மீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.52 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணி) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு பிஜியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.2 ஆக பதிவானதால், முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படாததையடுத்து, அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.
Possible #tsunami hazard to Fiji from 7.2 magnitude #earthquake #PTWChttps://t.co/X8CWaVIvSB — NWS PTWC (@NWS_PTWC) January 3, 2017 அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 6.9 அலகுகளாக பதிவு செய்துள்ள நிலையில், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

An earthquake with a magnitude of 7.2 struck 284 kilometres off the coast of Fiji at 10.52, the U.S. Geological Survey said. The National Weather service Pacific Tsunami Warning Centre, said the quake occurred south of Fiji.

அடுத்த செய்தி