ஆப்நகரம்

ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களின் மரபணு..!

ஒரு குழந்தைக்கு மூன்று பேரின் மரபணுவை கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்யும் புதிய முயற்சியில் அமெரிக்க டாக்டர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

TNN 1 Oct 2016, 9:02 pm
ஒரு குழந்தைக்கு மூன்று பேரின் மரபணுவை கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்யும் புதிய முயற்சியில் அமெரிக்க டாக்டர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Samayam Tamil first ever baby born with dna from 3 people
ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களின் மரபணு..!


தாய்,தந்தையின் மரபணுதான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும்.சில நேரம் பெற்றோர்களிடம் இருக்கும் மரபணுக் குறைபாடு,பிறக்கும் குழந்தைகளிடமும் காணப்படும்.சில நேரங்களில் இந்த குறைபாடுகள் அந்த குழந்தையின் வாழ்நாள் முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மெக்சிகோவில் உள்ள அமெரிக்க டாக்டர்கள்,தாய்,தந்தை மட்டுமல்லாது மூன்றாவது நபர் ஒருவரின் மரபணுவையும் சேர்த்து செயற்கை கருத்தருத்தல் மூலம் மரபணு குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

சில குடும்பங்களுக்கு பரம்பரையாகவே சில உடற் குறைபாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கும்.இன்னும் சில குழந்தைகளுக்கு தன்னுடைய தாய் மூலம் மரபணு குறைபாடானது தொடரும்.இது போன்ற சூழல் உள்ள குழந்தைகளுக்கு மூன்றாவது நபரின் மரபணுவுடன் சேர்த்து கருத்தரித்தல் நடக்கும் போது,மரபணுக்களின் அமைப்பு மாற்றமடைந்து குறைபாடுகள் களையப்படும்.

இந்த புதிய முயற்சி ஜோர்டானை சேர்ந்த தம்பதிகளிடம் செயல்படுத்தி பார்க்கப்பட்டு,அவர்களுக்கு பிறந்த முதல் மரபணு மாற்றுக் குழந்தை தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The technology allows parents with rare genetic mutations to have healthy babies

அடுத்த செய்தி