ஆப்நகரம்

சூரியக் குடும்பத்தைக் கடந்த முதல் அண்டவெளி குறுங்கோள்.!

அண்டவெளியில் இருந்து வந்த குறுங்கோள் ஒன்று சூரியக்குடும்பத்தை கடந்து சென்றுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது.

TNN 29 Oct 2017, 10:53 am
அண்டவெளியில் இருந்து வந்த குறுங்கோள் ஒன்று சூரியக்குடும்பத்தை கடந்து சென்றுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கூறியுள்ளது.
Samayam Tamil first small planet from outside the solar system
சூரியக் குடும்பத்தைக் கடந்த முதல் அண்டவெளி குறுங்கோள்.!


அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைக்கப்பட்டுள்ள் அதிநவீன தொலைநோக்கி மூலம் இந்த குறுங்கோள் கண்டறியப்பட்டதாகவும், அக்டோபர் 14ஆம் தேதி பூமிக்கு நெருக்கமாக அதாவது 15 மில்லியன் மைல்கள தொலைவில் இந்த குறுங்கோள் கடந்து சென்றதாகவும் நாசா தெரிவித்துள்ளது. வேறு ஒரு விண்மீன் குடும்பத்திலிருந்தோ அண்டவெளியில் இருந்தோ A/2017 U1 என்று பெயரிடப்பட்டுள்ள குறுங்கோள் வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதன் விட்டம் 400 மீட்டர்கள் என்றும் இது அண்டவெளியில் இருந்து வந்து சூரிய குடும்பத்தை கடந்து செல்லும் முதல் குறுங்கோள் என்று கருதப்படுகிறது.

சூரியக்குடும்பத்தைக் கடந்து செல்லும் இந்த குறுங்கோளின் பாதையை, அமெரிக்க விஞ்ஞானிகள், தொலைநோக்கி மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதன் பாதையிலிருந்து குறுங்கோள் எங்கிருந்து வந்திருக்கலாம் என்று கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

First small planet from outside the solar system

அடுத்த செய்தி