ஆப்நகரம்

முதல் உலகப் போர் நினைவு தினம்: ஒன்றுகூடி அஞ்சலி செலுத்திய உலக தலைவர்கள்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், முதல் உலக போரின் நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தலைவர்கள் பலரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

Samayam Tamil 11 Nov 2018, 10:25 pm
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், முதல் உலக போரின் நினைவு தினத்தை முன்னிட்டு, உலக தலைவர்கள் பலரும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
Samayam Tamil first world war centenary observed at france capital paris
முதல் உலகப் போர் நினைவு தினம்: ஒன்றுகூடி அஞ்சலி செலுத்திய உலக தலைவர்கள்


முதல் உலகப் போர் நடந்து இன்றுடன் நூறாண்டுகள் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, போரில் உயர்நீத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக, உலகின் 70 முக்கிய நாடுகளுடைய தலைவர்கள் பாரீஸிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அமெரித்த அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதின், கெனடா பிரதமர் ஜஸ்டின் ட்டூரேடோ ஆகியோருடன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார்.


கொட்டும் மழையில் குடை பிடித்தபடி, பாரிஸில் அமைக்கப்பட்டுள்ள போர் சின்னமான ‘ஆர்க் டி டிரியோம்பே’ முன்பு ஊர்வலமாக வந்த உலகத் தலைவர்கள் கூடி இருந்தனர். சரியாக காலை 11 மணிக்கு மணி அடித்ததும், முதல் உலகப் போரில் தங்களது இன்னுயிரை நீத்த கோடிக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தலைவர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதன்பின் உருக்கமாக பேசத் தொடங்கிய பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரான், “உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை.



அமைதிக்கான நமது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் வரலாறு நம்மை சில வேளைகளில் அச்சுறுத்தி வருகின்றது. தற்போது பழைய தீமைகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. முதல் உலகப் போர் விட்டுச்சென்ற தடங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து இன்னும் அழிந்தபாடாக இல்லை.

பருவநிலை மாற்றம், வறுமை, பஞ்சம் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போரிடுவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துக்கும் மேலாக அமைதிக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று பேசினார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்