ஆப்நகரம்

புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு: வங்கதேச நீதிமன்றம் அதிரடி

வங்கதேசத்தில் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNN 28 Mar 2017, 7:55 pm
டாக்கா: வங்கதேசத்தில் புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil five to hang for killing photojournalist in bangladesh
புகைப்பட பத்திரிகையாளரைக் கொன்ற 5 பேருக்கு தூக்கு: வங்கதேச நீதிமன்றம் அதிரடி


கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, புகழ்பெற்ற புகைப்பட பத்திரிகையாளர் அப்தப் அஹமத்(80), ராம்புராவில் இருந்த தன்னுடைய வீட்டில் மர்மநபர்களால் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஹுமாயுன் கபிர், ஹபிப் ஹவ்லதர், பெலால் ஹுசைன், ராஜூ முன்ஷி, ரஷீல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு டாக்கா விரைவு நீதிமன்ற அமர்வு முன்பு, நீதிபதி அப்துர் ரஹ்மான் சர்தர் தலைமையில் விசாரணைக்கு வந்தது.

அதில் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். புகைப்பட பத்திரிகையாளர் அப்தாப், கடந்த 2006ஆம் ஆண்டு, வங்கதேசத்தின் இரண்டாவது உயரிய விருதான ‘எகுஷே பதகை’ பெற்றுள்ளார். ’தி டெய்லி இட்டெஃபக்’ என்ற செய்தித்தாளில் தலைமை புகைப்பட பத்திரிகையாளராக இருந்த போது, முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

A Dhaka court on Tuesday sentenced five persons to death for killing award-winning photojournalist Aftab Ahmed in 2013, a media report said.

அடுத்த செய்தி