ஆப்நகரம்

வாங்கிப் பார்த்தா பூனைக்குட்டி; வளர்த்துப் பார்த்தா புலிக்குட்டி - அதிர்ச்சியூட்டும் கதை!

ஸ்பெஷல் பூனைக்குட்டி ஒன்று வாங்கி வளர்க்க ஆரம்பித்த தம்பதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 12 Oct 2020, 11:30 am
பிரான்ஸ் நாட்டின் வடக்கே அமைந்துள்ள நார்மண்டி மாகாணத்தில் உள்ள நகரம் லே ஹவ்ரி. இங்கு வசிக்கும் தம்பதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைனில் சவன்னா பூனை (Savannah Cat) ஒன்றை ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். பிரான்ஸ் நாட்டில் சவன்னா பூனையை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாது. இதையடுத்து அந்த பூனையை ஆசையுடன் வளர்த்து வந்துள்ளனர். இந்த சூழலில் சமீபத்தில் பூனையின் செயல்பாடுகளில் திடீரென மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Samayam Tamil france tiger cub


விரைந்து வந்த அவர்கள் வனவிலங்கு ஆர்வலர்கள் உதவியுடன் பூனையை ஆய்வு செய்தனர். அதில் தம்பதியின் வீட்டில் இருப்பது சவன்னா பூனை அல்ல. அது சுமத்ரான் வகை புலிக்குட்டி என்று தெரியவந்தது.

இதைக் கேட்டு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பிரான்ஸ் விலங்குகள் காப்பக அலுவலகத்தில் புலிக்குட்டி ஒப்படைக்கப்பட்டது. இந்த புலிக்குட்டி பிரான்ஸ் தம்பதிக்கு விற்கப்படுவதற்கு முன்பு, பல்வேறு நபர்கள் இதனுடன் செல்ஃபி எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவால் 12000 விலங்குகள் கொத்து கொத்தாக பலி!

தம்பதிக்கு புலிக்குட்டியை விற்ற விவகாரத்தில் போலீசார் இதுவரை 9 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் புலியை வாங்கிய தம்பதியும் அடங்குவர். இவர்கள் அனைவரின் மீதும் பாதுகாக்கப்பட்ட விலங்குகளை கடத்துதல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவை பூர்வீகமாக கொண்டவை சுமத்ரான் வகை புலிகள். இது மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நமது பூமியில் 400 சுமத்ரான் புலிகள் மட்டுமே வசித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி