ஆப்நகரம்

மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது பிரான்ஸ் : ரத்தாகிறது பெட்ரோல், டீசல் உயர்வு !

பாரீஸ் : மக்கள் போராட்டத்தால் பிரான்ஸ் அரசு. பெட்ரோல், டீசல் வரி அதிகரிப்பை ரத்து செய்தது.

Samayam Tamil 5 Dec 2018, 3:10 am
பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பை அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டம் நடத்தினர். தவிர, மின்கட்டணமும் உயர்த்தப்படும் என அரசு தெரிவித்தது
Samayam Tamil 1


அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது நம்பிக்கை இழக்கும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தினர். தவிர, பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் பாரீஸ் தெருக்களில் சுற்றினர். மேலும் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.
இந்நிலையில் பிரான்ஸ் அரசு திட்டமிட்டிருந்த வரி உயர்வை ரத்து செய்ய, பிரான்ஸ் அரசு முடிவெடுத்தது. இதுகுறித்து அதிபர் இமானுவேல் மேக்ரோன் அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

கட்சி எம்.பி.,க்களின் கூட்டத்திற்கு பின் பிரதமர் எடாவ்ர்ட் பிலிப், எரிபொருள் வரி உயர்வு ஆறு மாதத்துக்கு நிறுத்தப்படும் என அறிவித்தார்.

அடுத்த செய்தி