ஆப்நகரம்

மீண்டும் வருகிறது ஊரடங்கு: இந்த முறை செம டஃப்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 2 Jan 2021, 4:39 pm
இங்கிலாந்தில் பரவத் தொடங்கிய சக்திவாய்ந்த புதிய கொரோனா வைரஸ் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிவிட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வாகவே இருக்கிறது.
Samayam Tamil France


ஏற்கெனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பிரான்ஸில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை மேற்கொண்டு கட்டுப்படுத்துவதற்காக 15 மண்டலங்களில் இரவு ஊரடங்கை இரண்டு மணி நேரம் நீட்டித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

உருவாகிய இடத்திற்கே திரும்பிய உருமாறிய கொரோனா வைரஸ்!
மற்ற இடங்களில் இரவு 8 மணிக்கு ஊரடங்கு தொடங்குகிறது. ஆனால், இந்த 15 பகுதிகளில் மாலை 6 மணிக்கே ஊரடங்கு தொடங்கிவிடும். தலைநகர் பாரிஸில் தற்போதைய சூழலில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்படவில்லை.

இதுகுறீத்து பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் கேப்ரியல் அத்தல், “பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. ஆனால், ஒவ்வொரு பகுதிக்கும் இடையே கொரோனா தாக்கம் வேறுபடுகிறது. ஏதேனும் பகுதிகளில் நிலைமை மோசமடைந்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகமாக ஏறுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. சில பகுதிகளில் சுகாதார அமைப்பால் சமாளிக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏறியுள்ளது.

தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கும் செல்வராகவன்
இதுபோக, ஜனவரி 7ஆம் தேதி முதல் தியேட்டர்கள், கச்சேரி அரங்குகள் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி