ஆப்நகரம்

அக்., 15 முதல் கொரோனா பரிசோதனைகளுக்கு கட்டணம் - பிரதமர் அறிவிப்பு!

அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Sep 2021, 9:17 pm

ஹைலைட்ஸ்:

  • அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் கொரோனா பரிசோதனைகளுக்கு கட்டணம்
  • பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Covid
பிரான்ஸ் நாட்டில், வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல், கொரோனா பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படாது என்றும், கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்து உள்ளார்.

உலகையே, கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, உலக நாடுகள் இலவசமாக பரிசோதனை செய்து வருகின்றன. ஒருசில நாடுகளில் பரிசோதனைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல், நாட்டு மக்களுக்கு கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படாது. அதாவது, கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
"தாடியை வெட்டவோ, குறைக்கவோ கூடாது!" - சலூன் கடைகளுக்கு பறந்த உத்தரவு!
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், இலவச பரிசோதனை மேற்கொள்ள விரும்பினால் மருத்துவர் பரிந்துரைத்த சீட்டை கொண்டு வர வேண்டும். தடுப்பூசி செலுத்திய மக்களுக்கு அது தேவையில்லை. எனினும், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

சுகாதார பாஸ்போர்ட்டை பெற, தடுப்பூசி செலுத்தாத மக்கள் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள் என்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி