ஆப்நகரம்

மோடி அரசின் இந்துத்துவ அட்டூழியத்தை கிழித்துத் தொங்கவிட்ட பிரெஞ்சு காமிக்ஸ்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் இந்துத்துவ சர்வாதிகார ஆட்சி நடப்பதாக பிரெஞ்சு காமிக்ஸ் புத்தகம் ஒன்று விமர்சித்துள்ளது.

TNN 21 Jul 2017, 1:36 am
மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் இந்துத்துவ சர்வாதிகார ஆட்சி நடப்பதாக பிரெஞ்சு காமிக்ஸ் புத்தகம் ஒன்று விமர்சித்துள்ளது.
Samayam Tamil french comic book uses indias war on beef to illustrate the dangers of hindutva
மோடி அரசின் இந்துத்துவ அட்டூழியத்தை கிழித்துத் தொங்கவிட்ட பிரெஞ்சு காமிக்ஸ்


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வில்லியம் டி டமாரிஸ் என்ற காமிக்ஸ் எழுத்தாளர் 'புனிதமான பசு' என்ற தலைப்பில் புதிய காமிக்ஸ் நூல் ஒன்றை எழுதியுள்ளார். 30 பக்கங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் புத்தகத்தில் இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் உத்தரவை முன்னிருத்தி இந்தியாவில் இந்துத்துவ சர்வாதிகார ஆட்சி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்கள் அனைவரும் பசுவை காப்பதிலேயே அக்கறையாக இருக்கிறார்கள் என்றும் அதற்காக மனிதர்களைக்கூட தாக்குவதாகுவும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக ஆட்சியில் புனிதமான பசுவின் பெயரால் நாட்டை பிரிந்தாளுகிறது என்றும் பசுக்களைக் காப்பதற்குத்தான் மோடி பிரதமாராகியிருக்கிறார் என்றும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. 29 மாநிலங்களில் 5 மாநிலங்களில் மட்டும் மாட்டிறைச்சித் தடை அமல்படுத்தப்படவில்லை என்றும் அந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.


கடந்த மார்ச் 2015லேயே மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. பின்னர், நாடு முழுவதும் மோடி அரசு அதனை உத்தரவாக திணித்துள்ளது என்றும் அந்த காமிக்ஸ் நூல் விமர்சித்துள்ளது.

அடுத்த செய்தி