ஆப்நகரம்

ஏமன் வான்வழித் தாக்குதலில் பலியான குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!

கூட்டு வான்வழித் தாக்குதலில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Aug 2018, 3:04 pm
சனா: கூட்டு வான்வழித் தாக்குதலில் ஏராளமான பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Yemen


வடக்கு ஏமனில் இருக்கும் ஹௌதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சதா மாகாணத்தின் தஹ்யான் பகுதியை குறிவைத்து, சவுதி அரேபியா கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

அப்போது கோடை முகாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த பள்ளிப் பேருந்து தாக்குதலுக்கு ஆளானது. இதில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Funerals held for children killed in school bus attack.

அடுத்த செய்தி