ஆப்நகரம்

ஜெர்மனி வரும் அகதிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு

2016ம் ஆண்டு இறுதியில் ஜெர்மனிக்குள் அடைக்கலம் தேடிவரும் அகதிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது.

TNN 29 Aug 2016, 1:44 am
2016ம் ஆண்டு இறுதியில் ஜெர்மனிக்குள் அடைக்கலம் தேடிவரும் அகதிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அந்நாடு தெரிவித்துள்ளது.
Samayam Tamil germany expects up to 300000 migrants this year
ஜெர்மனி வரும் அகதிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு


சிரியா, ஈராக், லிபியா உள்ளிட்ட மத்திய கிழக்காசிய நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துவருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு வருவதால், அங்கு பெரும் சட்டசிக்கல் ஏற்பட்டுள்ளது.

அகதிகளை முதலில் முகாம்களில் தங்கவைத்து, அதன்பின்னர் ஜெர்மனி, இங்கிலாந்து, கிரீஸ், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்த முறையில், குறிப்பிட்ட அளவிலான அகதிகளுக்கு, ஆண்டுதோறும் அடைக்கலம் தர முடிவு செய்துள்ளன.

இதன்படி, கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுவரை கணிசமான அகதிகளுக்கு அடைக்கலம் அளித்துள்ளன. தற்போது, ஜெர்மனியும் லட்சக்கணக்கான அகதிகளை தங்களது நாட்டுக்குள் அனுமதித்து வருகிறது. 2016ம் ஆண்டின் இதுவரையான காலத்தில் மட்டும் 3 லட்சம் அகதிகள் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளதாக, ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவருக்கும் அனுமதி அளித்துள்ளதாகவும், இனிமேல் புதியதாக வருவோருக்கு, அடுத்த ஆண்டில்தான் அடைக்கலம் தரப் போவதாகவும் ஜெர்மனி குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே, கிரீஸ் நாடு, 4 லட்சத்திற்கும் அதிகமான அகதிகளுக்கு அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி