ஆப்நகரம்

உலகம் முழுக்க ஒரு கோடி பேருக்கு கொரோனா!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

Samayam Tamil 28 Jun 2020, 10:06 am
சர்வதேச அளவில் கொரோனாவால் ஒட்டுமொத்தமாக ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி, உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.
Samayam Tamil கொரோனா பாதிப்பு


கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் மாகானத்தில் முதல்முதலாக கொரோனா பரவத் தொடங்கியது. அதன்பின்னர் கடந்த ஆறு மாதங்களில் உலகம் முழுவதும் பரவி கோரதாண்டவம் ஆடி வருகிறது. வைரஸ் வேகமாக பரவிய பிப்ரவரி, மார்ச் மாதங்களின்போது, கோடைக்காலத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஜூன் மாதத்தில் மட்டுமே ஒவ்வொரு நாளும் சுமார் 1.25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே உலகளவில் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 1.9 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மார்ச் மாதத்தில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளை கொரோனா மிக மோசமாக பாதித்து ஏராளமானவர்களை பலியாக்கியது. அதன்பின்னர் அமெரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்க நாடுகளும் கொரோனாவின் பிடிக்குள் சிக்கின.

மொத்தம் 38 நாடுகள் இதுவரை ஏறக்குறைய கொரோனாவை ஒழித்துவிட்டன. இதில் பெரும்பான்மையானவை துவாலு, வனாட்டு, சாலமன் தீவுகள் போன்ற சிறு சிறு தீவு நாடுகளே. இந்தியாவின் அண்டை நாடுகளான பூட்டான், இலங்கையும் கொரோனாவின் பிடியில் இருந்து ஏறக்குறைய தப்பித்துவிட்டன.

பூட்டானில் ஒரு கொரோனா நோயாளிகூட இல்லை. இலங்கையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9ஆக குறைந்துள்ளது. தற்போது அமெரிக்காதான் உலகளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் தினசரி 40000க்கும் மேலானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

அடுத்த செய்தி