ஆப்நகரம்

கொரோனாவால் 15 லட்சம் பேர் பலி!

கொரோனா தொற்றால் உலகளவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 10:35 pm

ஏறக்குறைய கடந்த ஓராண்டாக கொரோனா வைரஸுடன் உலக மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.
Samayam Tamil Representational image


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10,000 பேர் இறந்துள்ளனர். கொரோனாவுக்கு ஃபைசர், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் வெற்றிபெற்றுள்ளன. உலகிலேயே முதல்முறையாக ஃபைசர் தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து டிசம்பர் 2ஆம் தேதியன்று ஒப்புதல் அளித்தது.

இத்தாலியில் இந்த வாரம் 993 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியுள்ளது. மேலும், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,85,000ஐ தாண்டியுள்ளது.

என்னம்மா ட்ரெஸ் இது? இளம் மாடல் அழகி கைது!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனாவால் 4,50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனினும் கொரோனாவால் உயிரிழந்தோரின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டில் காசநோயால் இறந்தவர்களை விட கொரோனாவால் இறந்தவர்கள் அதிகம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. தற்போது தடுப்பூசி வெளியாகவுள்ளதால் கொரோனா ஒழிவது குறித்து கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 96.1 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 90.6 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 1.40 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி