ஆப்நகரம்

நாளை வெளியாகும் கைலாசா நாணயங்கள்..! நித்தி ஆடவுள்ள ஆட்டம்

கைலாசா நாட்டை அமைத்தது விட்டதாக கூறும் நித்யானந்தா அந்நாட்டிற்கான நாணயங்களை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவதாக அறிவிப்பு

Samayam Tamil 21 Aug 2020, 8:44 pm
அகமதாபாத் போலீசாரால் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கடந்த காலத்தில் ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார். அதன்படி, ஈக்வடாரில் ஒரு தீவை வாங்கியதாக முந்தைய தகவல்கள் வந்ததும், அதை ஈக்வடார் அரசு மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
Samayam Tamil nithyananda


இந்த நிலையில் கைலாசா நாட்டை அமைந்துள்ளதாக கூறும் நித்யானந்தா, மத்திய வங்கியை உருவாக்கியுள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக கைலாசா பணத்தை அச்சிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அது தொடர்பான முக்கிய அறிவிப்பை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடுவேன் என்று முகநூலில் வீடியோ வெளியிட்டு கூறினார்.

அது தொடர்பாக சில தகவல்களை ஆராய்ந்தபோது, கடந்த ஆண்டு அக்டோபரில் நித்யானந்ததா, கைலாசா லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தை ஹாங்காங்கின் உலகளாவிய நிதி மையத்தில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதற்கு, ஹாங்காங்கின் ஸ்டான்லி தெருவில் உள்ள ஒரு உலக அறக்கட்டளை கோபுரத்தின் முகவரியை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நித்யானந்தா உண்மையில் ஒரு மத்திய வங்கியை தொடக்கி, பணத்தை அச்சிடுவாரா என்பதை நகைப்புடன் பார்த்தாலும், அதை மறுத்துவிடவும் முடியாது.ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் தங்களுக்கென்று நாணயங்களை அச்சிட முடியும். உதாரணமாக, இங்கிலாந்தில் குறிப்பிட்ட சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரிஸ்டல் பவுண்டுகள் மற்றும் லூயிஸ் பவுண்ட் போன்ற நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இனி மாஸ்க் அணியத் தேவையில்லை: சீனாவில் என்னதான் நடக்கிறது?

அத்தகைய நாணயங்களை வடிவமைக்கவும், அச்சிடவும் உதவ ஒரு வலைத்தளம்கூட உள்ளது. அதுபோல நித்யானந்தா தனது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒரு நாட்டின் உள்ளூர் சட்டங்களைப் பயன்படுத்தி தனது சமூகத்தின் உறுப்பினர்களால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட தனது சொந்த நாணயத்தை அச்சிட முடியும்.

ஆனால், அது சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் இயங்காது என்பதும் உண்மை. முந்தைய வீடியோவில் கால் காசு முதல் 10 காசு வரையில் தங்க நாணயங்களை அவர் அச்சிட்டுள்ளதாகவும், அதற்கு தமிழில் பொற்காசுகள் என்று அழைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

அடுத்த செய்தி