ஆப்நகரம்

ஹபீஸ் சயீதின் கோரிக்கையை நிராகரித்த ஐநா.,

தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஹபீஸ் சயீத்தின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

Samayam Tamil 8 Mar 2019, 1:16 am
தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஹபீஸ் சயீத்தின் கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.
Samayam Tamil hafeez syed


மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் மற்றும் அவனுடைய பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. ஹபீஸ் சயீத் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைக்கப்பட்டான். அவன் இப்போது பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருக்கிறான்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஹபீஸ் சயீத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவனுடைய கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

இந்நிலையில், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சையதை விசாரிக்க ஐ.நா அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால் அதிகாரிகளுக்கு விசா தர நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது.

அடுத்த செய்தி