ஆப்நகரம்

ஹாலிவுட் அரசியல்வாதி அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை - எப்படி இருக்கிறார் தெரியுமா?

அர்னால்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதை அடுத்து தற்போதைய உடல்நிலை குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 25 Oct 2020, 11:39 am
ஹாலிவுட் திரைப்பட நடிகரும், அமெரிக்காவின் முன்னாள் அரசியல் தலைவருமாக இருந்தவர் அர்னால்டு. இவரது “டெர்மினேட்டர்” சீரியஸ் திரைப்படங்கள் உலகப் பிரபலம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2011 வரை கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராக இருந்துள்ளார். மீண்டும் திரை உலகிற்கு திரும்பிய இவர், ”டெர்மினேட்டர் டார்க் பேட்” என்ற திரைப்படத்தில் நடித்தார். 73 வயதாகும் இவருக்கு இதயப் பிரச்சினை இருந்துள்ளது.
Samayam Tamil Arnold


இதையொட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இதயத்தின் ஆர்டிக் வால்வை மாற்றி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறை இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 2018ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இதயத்தின் பல்மோனிக் வால்வு மாற்றத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில் அர்னால்டு உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்று உலகம் முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ட்ரம்ப்னு ஒருத்தருக்கு ஓட்டு போட்டேன்: ட்ரம்ப் குசும்பு!

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அர்னால்டு பதிவிட்டுள்ளார். அதில், க்ளிவ்லேண்ட் கிளினிக் மருத்துவர்களுக்கு மிகுந்த நன்றி. எனது இதயத்தில் புதிய ஆர்டிக் வால்வு பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. க்ளிவ்லேண்ட் நகரின் வீதிகளில் என்னால் இயல்பாக நடந்து செல்ல முடிகிறது. எனக்கு சிகிச்சை அளித்த அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு மிக்க நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி