ஆப்நகரம்

அமெரிக்காவின் புறக்கணிப்பை மற்ற நாடுகள் ஏற்காது- ஹுவாய் சி.இ.ஓ

தமது நிறுவனத்தை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் செயலை மற்ற நாடுகளும் பின்பற்றும் என தான் கருதவில்லை என ஹூவாய் நிறுவன சி.இ.ஓ தெரிவித்துள்ளார்

Samayam Tamil 26 May 2019, 9:21 pm
தமது நிறுவனத்தை புறக்கணிக்கும் வகையில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் செயலை மற்ற நாடுகளும் பின்பற்றும் என தான் கருதவில்லை என ஹூவாய் நிறுவன சி.இ.ஓ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நிலவி வரும் வர்த்தகப் போர் காரணமாக உலக பங்கு சந்தை பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டன.
Samayam Tamil 155887688262838


சீனாவுடன் வர்த்தக போர் நீடித்துவரும் நிலையில், சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா திடீரென உயர்த்தியது. இதனிடையே நாட்டின் தொழில்நுட்ப துறையில், அவசர நிலையையும் பிரகடனப்படுத்தியுள்ள அமெரிக்காவின் செயலால், சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனமும் சரிவைச் சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹூவாய் நிறுவனத்தின் சி.இ.ஓ, ரென் ஜெங்பே (Ren Zhengfei) ஹூவாய் நிறுவனத்தை புறக்கணிக்கும் முயற்சியில் ஈடுபடும் அமெரிக்காவின் செயலை, மற்ற நாடுகளும் பின்பற்றும் எனக் கூற முடியாது எனத் தெரிவித்தார். பல்வேறு நாட்டு பிரதிநிதிகளுடன், தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறிய அவர், ஒவ்வொரு நாடும் பிரத்யேகமான முடிவுகளை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி