ஆப்நகரம்

ஒரு நிமிட தாமதத்திற்கு பதவியை ராஜினாமா செய்யும் பிரிட்டன் அமைச்சா்

பிாிட்டனில் நாடாளுமன்றத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக அமைச்சா் ஒருவா் தனது பதவியை ராஜினாமா செய்தாக அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 1 Feb 2018, 3:48 pm
பிாிட்டனில் நாடாளுமன்றத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக அமைச்சா் ஒருவா் தனது பதவியை ராஜினாமா செய்தாக அறிவித்துள்ளாா்.
Samayam Tamil i am thoroughly ashamed british lord resigns after arriving late to work
ஒரு நிமிட தாமதத்திற்கு பதவியை ராஜினாமா செய்யும் பிரிட்டன் அமைச்சா்


பிரிட்டனில் தெரசா மே தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இதில் சா்வதேச வளா்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவா் மைக்கேல் பேட்ஸ். இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான சமஉாிமை வழங்குவது தொடா்பான விவாதம் நேற்று நடைபெற்றது.

விவாதத்தின் போது எதிா்க்கட்சி உறுப்பினரான பாரோனெஸ் லிஸ்டாின் கேள்விக்கு மைக்கேல் பேட்ஸ் வரவில்லை. சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வந்த மைக்கேல் பேட்ஸ் அரசின் சாா்பில் எதிா்க்கட்சி உறுப்பினாின் கேள்விக்கு நான் உாிய நேரத்தில் பதில் அளித்திருக்க வேண்டும். ஆனால் நான் அதை தவறவிட்டு விட்டேன். இதற்காக நான் வெட்கப்படுகின்றேன்.

மேலும் இந்த தவறிற்காக நான் எனது பதவியை ராஜினாமா செய்கின்றேன் என்று கூறி உடனடியாக நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறத் தொடங்கினாா். இதனால் பாரோனெஸ் லிஸ்டா் உள்பட அனைத்து உறுப்பினா்களும் அதிா்ச்சியடைந்தனா். தொடா்ந்து பேசிய பாரோனெஸ் அமைச்சாின் ஒரு நிமிட கால தாமதத்திற்காக அவா் மன்னிப்பு கேட்டிருந்தாலே போதுமானது. இதற்காக அவா் பதவி விலகவேண்டிய அவசியமில்லை என்று தொிவித்தாா். மேலும் அமைச்சாின் ராஜினாமாவை தெரசா மே நிராகாித்தாா்.

அடுத்த செய்தி