ஆப்நகரம்

யப்பா... உடைந்து நொறுங்கிய 31 ஆயிரம் கோடி டன் எடையுள்ள பனிப்பாறை.... பூமி தாங்குமா?

அன்டார்டிகாவில் பல கோடி டன் எடையுள்ள பனிப்பாறை உடைந்து நொறுங்கியுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Oct 2019, 5:19 pm
பருவநிலை மாற்றத்தின் விளைவாக, ஆர்ட்டிக் மற்றும் அன்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகி வருவதால், கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் நாளடைவில் உலக முழுவதும் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
Samayam Tamil iba


இதையடுத்து, பருவநிலை மாற்றத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வும், நடவடிக்கைகளும் அவசியம் என உலக அளவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அன்டார்டிகா கண்டத்தின் கிழக்கு பகுதியில், சுமார் 31 ஆயிரம் கோடி டன் எடையுள்ள பிரம்மாண்ட பனிப்பாறை உடைந்து கரைந்துள்ளது. சமீபத்தில் இரண்டு தினங்களிலேயே இந்த ராட்ஷச பனிப்பாறை உடைந்து நொறுங்கியுள்ளது.

அன்டார்டிகா பகுதியில் நிலவும் தொடர் பனிப்பொழிவாலும், பனிப்பாறைகளின் கடற்கரையை நோக்கிய நகர்வாலும், அதன் கிழக்கு பகுதியில் உள்ள பனிப்பாறைகளின் எடை வழக்கத்தைவிட அதிகரிக்கும். அப்போது, பனிப்பாறைகள் தங்களின் இயல்பான எடையை தக்கவைத்து கொள்வதற்காக இவ்வாறு உடைந்து கரைவது அவ்வபோது நடைபெறும் நிகழ்வு தான்.

இதுபோன்று தான், சுமார் 1,582 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 210 மீட்டர்களுக்கு மேல் தடிமன் கொண்ட"டி 28" வகை பனிப்பாறை உடைந்து விழுந்துள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதே போன்று நிகழ்ந்துள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது பனிப்பாறை உடைந்து உருகியுள்ளதாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி