ஆப்நகரம்

பதவியேற்பு விழாவிற்கு அமீர் கான், கபில் தேவிற்கு அழைப்பு; அமைதிக்கரம் நீட்டும் இம்ரான்!

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 1 Aug 2018, 8:16 pm
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கான், இந்திய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Samayam Tamil Imran Khan


இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி, சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க சில இடங்கள் குறைவாகப் பெற்று காணப்படுகிறது.

இதையடுத்து பிற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சி அமைக்க போதுமான கூட்டணியை உருவாக்கி வருகிறது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் விழாவிற்கு, சார்க் நாடுகளின் தலைவர்கள், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது.

ஆனால் அவரது கட்சி பின்னர் மறுத்துவிட்டது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஃபவத் சவுத்ரி, வெளிநாட்டுத் தலைவர்களை அழைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி, இம்ரான் கானைத் தொடர்பு கொண்டு, பொதுத் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள். இருநாடுகளுக்கு இடையே புதிய அத்தியாயம் தொடங்கி, நல்லுறவு ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிர் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை பதவியேற்பு விழாவிற்கு இம்ரான் கான் அழைத்துள்ளார்.

Imran Khan Invites Aamir Khan, Sunil Gavaskar, Kapil Dev To Oath Ceremony.

அடுத்த செய்தி