ஆப்நகரம்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்பு!

பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்கிறார்.

Samayam Tamil 18 Aug 2018, 8:31 am
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்கிறார்.
Samayam Tamil Imran Khan


இன்று காலை 10 மணிக்கு ஐவான்-இ-சத்ரில் நடைபெறும் விழாவில், இம்ரான் கானுக்கு பிரதமராக குடியரசுத் தலைவர் மம்நூன் ஹூசைன் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 372 இடங்களில் 172 இடங்களைப் பெறுபவரே பிரதமராக தேர்வு செய்யப்படுவார்.

இதையடுத்து நேற்று கூடிய நாடாளுமன்ற அவையில், இம்ரான் கானுக்கு ஆதரவாக 176 வாக்குகள் கிடைத்தன. எதிராக 96 வாக்குகள் பதிவாகின. இதன்மூலம் புதிய பிரதமராக இம்ரான் கான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பாகிஸ்தானின் 22வது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் பதவியேற்பு விழா, மிகவும் எளிமையாக நடத்தப்படுகிறது. விழாவில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்பட உள்ளது.

இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Imran Khan to be sworn in as Prime Minister today.

அடுத்த செய்தி