ஆப்நகரம்

சபாநாயகர் வெளிநடப்பு! பாகிஸ்தானில் காமெடி

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வெளிநடப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 15 Mar 2018, 11:00 pm
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வெளிநடப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil in a rare happening speaker na ayaz sadiq stages walkout
சபாநாயகர் வெளிநடப்பு! பாகிஸ்தானில் காமெடி


நாடாளுமன்ற கூட்டத்தின் போது எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்வது வழக்கமாக நடக்கக்கூடிய நிகழ்வு. அவர்களை சமாதானம் செய்து அமைதிபடுத்த சபாநாயகர் முயற்சிப்பார். ஆனால், பாகிஸ்தான் நாட்டில் சபாநாயகரே நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருப்பவர் அயாஸ் சாதிக். இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தின் போது, கேள்விக்கு பதிலளிக்க வேண்டி அமைச்சர் அவையில் இல்லாததைக் கண்டு, நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தியதாக கண்டி்த்தார். இதையடுத்து பொறுமை இழந்த அயாஸ் சாதிக், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பு செய்தார். இந்த சம்பவத்தால், அந்நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி