ஆப்நகரம்

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாடு: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆனது

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு விதிமுறை ஆவணத்தில் இன்று இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் இந்த அமைப்பில் இந்தியா நிரந்தர முழு உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும்.

TOI Contributor 27 Jun 2016, 10:51 am
ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு விதிமுறை ஆவணத்தில் இன்று இந்தியா கையெழுத்திட்டது. இதன் மூலம் இந்த அமைப்பில் இந்தியா நிரந்தர முழு உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும். என்எஸ்ஜி மற்றும் என்பிடியில் இந்தியா இணைவதற்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், இன்று ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு விதிமுறைக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
Samayam Tamil india becomes full member of missile technology control regime signing of document
ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாடு: இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆனது


இந்த திட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். ஜெய்சங்கர் கையெழுத்திட்டார். இந்த அமைப்பில் உறுப்பினர் ஆக கடந்த ஆண்டு இந்தியா விண்ணப்பித்து இருந்தது. இந்த அமைப்பில் சீனா உறுப்பு நாடாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பில் இந்தியா பங்கேற்பதற்கு கடந்தாண்டு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. 2012ல் இந்திய கடல் எல்லையில் இரண்டு இந்திய மீனவர்களைக் கொன்ற வழக்கில் இத்தாலி மாலுமிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இந்தியாவுக்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த அமைப்பின் நோக்கமே ஏவுகணை கட்டுப்பாடுகள், ஆள் இல்லா ஏவுகணைகளுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருவது போன்றவையாகும்.

அடுத்த செய்தி