ஆப்நகரம்

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு!

இந்திய, சீன ராணுவத் தளபதிகள் நாளை சந்தித்து எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.

Samayam Tamil 5 Jun 2020, 10:10 pm
இந்தியா-சீனா எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள சூழலில், இப்பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய, சீன ராணுவத் தளபதிகள் நாளை சந்திக்கவிருக்கின்றனர்.
Samayam Tamil இந்தியா சீனா எல்லை


இதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரத்தில், “மோல்டோ பகுதியில் நடைபெறவிருக்கும் சந்திப்பில், 14ஆம் பட்டாளத் தளபதி ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு ஷிஞ்சியாங் ராணுவ மண்டளத் தளபதி மஜ்ஜென் லியு லின்னுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தின் தொடக்கத்தில் சீன தரப்பில் 5,000 ராணுவப் படையினர் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இருதரப்பிலும் 10 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக எல்லையில் சீன ராணுவத்தின் தரப்பில் பெரிதாக எந்த முன்னெடுப்பும் இல்லை.

கிழக்கு லடாக் பகுதியில் சீன தரப்பு ராணுவ படையினரை நிறுத்தி வைத்ததால் இந்தப் பிரச்சினை தொடங்கியது. இதைத்தொடர்ந்து உடனடியாக இந்தியத் தரப்பிலும் ராணுவப் படையினர் எல்லை பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டனர். இதுபோக சீன தரப்பில் கனரக போர் வாகனங்களும், பீரங்கிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன

இந்திய தரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் ரோந்துப் பணிகளை பலப்படுத்தியுள்ளன. மேலும், லடாக் முதல் அருணாசலப் பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதியில் ராணுவப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி