ஆப்நகரம்

சீனாவின் சேட்டையை அடக்க இந்திய ராணுவம் ரெடி!

எல்லைப் பகுதியில் இந்தியா தனது ஏவுகணைகளையும், பீரங்கிகளையும் குவித்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2020, 5:24 pm
இந்தியா, சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும், சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்கும் வண்ணம் இந்தியா தனது எல்லையில் பல ரக ஏவுகணைகளை தயார்நிலையில் வைத்திருக்கிறது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
Samayam Tamil india deploys missiles and tankers along lac to counter china
சீனாவின் சேட்டையை அடக்க இந்திய ராணுவம் ரெடி!


பிரம்மோஸ்

ஒடிசா மாநிலம் பலசோரில் இந்தியா தனது புதிய பிரம்மோஸ் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோமீட்டர் வரை தரையில் இருந்து தரைக்கு தாக்குதல் நடத்தக்கூடிய திறன் கொண்டது. சீனாவுக்கு பலமான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் இந்தியா இந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

​ஆகாஷ்

வான்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகள் அசாம் மாநிலம் டெஸ்பூர் விமானப் படைத் தளத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை வேகமாக பறக்கக்குடிய விமானங்கள், ட்ரோன்களை உடனடியாக சுட்டு வீழ்த்திவிடும்.

நிர்பய்

எல்லைப் பகுதியில் சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் சப்சோனிக் ஏவுகணையான நிர்பய் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகளால் குறைந்தபட்சமாக 100 மீட்டர் உயரம் வரை சென்று தாக்குதல் நடத்தமுடியும்.

​தோள் தாங்கி ஏவுகணைகள்

கிழக்கு லடாக்கில் எந்த நேரத்திலும் அசாதாரண சூழல்களை எதிர்கொள்வதற்காக இந்திய ராணுவம் தனது வீரர்களிடம் தோள் தாங்கி ஏவுகணைகளை கொடுத்திருக்கிறது. சீன ஹெலிகாப்டர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இவை பெரிதும் உதவும்.

​பீரங்கிகள்

லடாக்கில் சுமர் தெம்சோக் பகுதியில் இந்தியா சில தினங்களுக்கு முன் டி90 மற்றும் டி72 ரக பீரங்கிகளையும், ராணுவ வாகனங்களையும் குவித்துள்ளது. சீனா தனது படைகளை எல்லைப் பகுதியில் குவித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து இந்தியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

அடுத்த செய்தி