ஆப்நகரம்

பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் : பாக் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி

இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Feb 2019, 3:55 pm
இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil qurrasy


கடந்த 14ம் தேதி புல்வாமா பகுதியில் துணை ராணுவ படையினர் சென்ற பேருந்து மீது பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 40க்கும் அதிகமான வீரர்கள் இறந்தனர்.

இதையடுத்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா இன்று அதிகாலை 3.30, 12 மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 200- 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் எச்சரிக்கை :
இந்தியாவின் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் இந்திய விமானங்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளன. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி