ஆப்நகரம்

இந்தியா vs சீனா: இராணுவ பலம் ஒப்பீடு... லேட்டஸ்ட் அப்டேட்

பேசித்தீர்ப்பது குறித்து இரு நாடுகளும் பேசி வருகின்றன. எனினும் போர்ப்பதற்றமும் நீடிக்கிறது. இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

Samayam Tamil 19 Jun 2020, 12:43 pm
அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு உரசல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது இந்திய-சீன எல்லையில் நிலவும் போர்ச்சூழலும், இரு நாட்டு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டிருக்கும் பரஸ்பர வெறுப்பும் நிலைமைமை மேலும் மோசமாக்கக்கூடியதாக உள்ளன.
Samayam Tamil india vs china military power comparison with latest data
இந்தியா vs சீனா: இராணுவ பலம் ஒப்பீடு... லேட்டஸ்ட் அப்டேட்


போர் என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வியைக் கடந்து இரு தரப்புக்கும் பேரழிவு ஒன்றே முடிவாகக் கிடைக்கும். இதனால், அமைதியான முறையில் பேசித்தீர்ப்பது குறித்து இரு நாடுகளும் பேசி வருகின்றன. எனினும் போர்ப்பதற்றமும் நீடிக்கிறது. இந்நிலையில், இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

ஆசியாவில் எல்லைப்பிரச்சினைகளுக்காக போர் புரியும் நாடுகள் என்றால் சீனா- ரஷ்யா, இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளின் எல்லைப்போட்டிகள் குறிப்பிடத்தக்கவை. இதில் இராணுவத்துக்காக அதிகம் செலவிடும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன.

இராணுவத்துக்கான செலவு:

2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 4,71,386 கோடி ரூபாயை இராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது இந்தியா. அதாவது 65.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

அதே சமயம் 179 பில்லியன் அமெரிக்க டாலர்களை தன் ராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது சீனா. அதாவது ரூபாய் மதிப்பில் 1365 கோடியே 56 லட்சத்தி 41ஆயிரம் கோடி இது.


வீரர்களின் எண்ணிக்கை:
சீன இராணுவத்தில் 26 லட்சத்து 93ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்திய ராணுவத்தில் 34 லட்சத்து 62ஆயிரத்து 500 வீரர்கள் உள்ளனர்.


வானூர்திகள்:
இந்தியா தரப்பில் 2082
சீனா தரப்பில் 3187


ஹெலிகாப்டர்கள்:

இந்தியா தரப்பில் 692
சீனா தரப்பில் 1004


சண்டை விமானங்கள்:
இந்தியா தரப்பில் 520
சீனா தரப்பில் 1222


தாக்குதல் ஜெட்கள்:
இந்தியா தரப்பில் 694
சீனா தரப்பில் 1564


டாங்கிகள்:
இந்தியா தரப்பில் 4184
சீனா தரப்பில் 13,050


கவசம் தாங்கிய வாகனங்கள்:
இந்தியா தரப்பில் 2815
சீனா தரப்பில் 40,000



கடற்படை தாக்குதல் வாகனங்கள்:
இந்தியா தரப்பில் 295
சீனா தரப்பில் 714


நீர்முழ்கிக் கப்பல்கள்:
இந்தியா தரப்பில் 16
சீனா தரப்பில் 76


இந்தியாவின் ராணுவத்தில் சேர்ப்பதற்காக வாங்கப்பட்ட 36 ரபேல் போர் விமானங்கள் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை என்பதும், வரும் ஜூலை மாதம் ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி