ஆப்நகரம்

அமெரிக்காவில் உலகத்தர மருத்துவமனை கட்ட ரூ.1,300 கோடி; இந்திய தம்பதியினர் தாராளம்!

அமெரிக்காவில் நவீன மருத்துவமனை கட்ட ரூ.1300 கோடி நன்கொடை அளித்து இந்திய தம்பதியினர் உதவியுள்ளனர்.

TNN 27 Sep 2017, 10:54 am
ஹூஸ்டன்: அமெரிக்காவில் நவீன மருத்துவமனை கட்ட ரூ.1300 கோடி நன்கொடை அளித்து இந்திய தம்பதியினர் உதவியுள்ளனர்.
Samayam Tamil indian couple donates rs 1300 crore for us
அமெரிக்காவில் உலகத்தர மருத்துவமனை கட்ட ரூ.1,300 கோடி; இந்திய தம்பதியினர் தாராளம்!


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா துறைமுக நகரைச் சேர்ந்தவர்கள் டாக்டர் கிரண் பட்டேல், பல்லவி.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்கள், ‘பிரிடம் ஹெல்த்’ என்ற பெயரில் சுகாதார நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் மியாமி அருகே உள்ள நோவா தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு 200 மில்லியன் டாலர்(ரூ.1,300 கோடி) நன்கொடை அளித்துள்ளனர்.

அதில் 50 மில்லியன் டாலரை ரொக்கமாகவும், 150 மில்லியன் டாலரை மூன்றே கால் லட்சம் சதுர அடி நிலமாகவும் வழங்கியுள்ளனர்.

இதன்மூலம் இந்தியாவில் இருந்து வரும் மருத்துவர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் புளோரிடா மாகாணத்தில் உலகத் தரம் வாய்ந்த சுகாதாரத்தை உருவாக்க உதவிகரமாக அமையும் என்று கூறப்படுகிறது.

Indian Couple donates Rs.1300 crore for US.

அடுத்த செய்தி