ஆப்நகரம்

மசூத் அசார் உயிரிழப்பு? - இந்திய புலனாய்வு அமைப்புகள் என்ன சொல்கிறது?

ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 3 Mar 2019, 9:53 pm
ஜெய்ஷ்-இ-முகமது தலைவன் பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil masood azhar


ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாத் சிறுநீரக செயல் இழந்ததால் உயிரிழந்துவிட்டதாக சமுக வலைத்தளங்களில் பரவின. பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதை உறுதிப்படுத்தும் முயற்சியில் இந்திய புலனாய்வு அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றது.

பயங்கரவாத செயல்கள்:
இந்தியவால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த மசூத் அசாத் 1999 ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன் விமானத்தை கடத்தி, பயணிகளை விடுவிக்க வேண்டுமானால் மசூத் அசாத்தை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டான்.

அதையடுத்து 2001 நாடாளுமன்ற தாக்குதல், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தற்கொலைப்படை தாக்குதல், பதான்கோட்தாக்குதல் என பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.

அண்மையில் 40க்கும் அதிகமான துணை ராணுவ படை வீரர்கள் தற்கொலை படை தாக்குதலால் பலியாகினர். இதற்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பொறுப்பேற்றது.

மசூத் அசாத் மரணம்?
அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட போது கூட மசூத் அசாத் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மொஹம்மத் குரேஷி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவர் சிறுநீரக பிரச்னைக்கு அவர் எடுத்துவந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் பரவின.
ஆனால் அவர் தற்போது நலமுடன் இருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


உறுதிப்படுத்துமா இந்திய புலனாய்வு அமைப்பு? மசூத் அசாத் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பதை பாகிஸ்தானை அனுகி உறுதிப்படுத்த இந்திய புலனாய்வு அமைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

அடுத்த செய்தி