ஆப்நகரம்

அமெரிக்காவில் தொடரும் நிறவெறி: மற்றொரு இந்தியர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

TNN 4 Mar 2017, 2:16 pm
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டின் முன்பாகவே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Samayam Tamil indian origin businessman harnish patel shot dead outside his home in us
அமெரிக்காவில் தொடரும் நிறவெறி: மற்றொரு இந்தியர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் அண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா இரவு விடுதி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நடத்து ஒரு வாரம் கூட கடக்காத நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் ஒரு இந்தியர் அமெரிக்காவின் லன்காஸ்டர் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஹர்னிஷ் படேல் என்ற அந்த நபர் அவரது வீட்டின் அருகே கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு அருகே இருந்த அவர் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். ஹர்னிஷ் படேலின் ஸ்டோர் லங்காஸ்டர் நகரின் ஷெரீப் அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கிறது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் ஷெரீப் அலுவலக ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார் அப்போது, ஹர்னிஷ் இறந்துகிடப்பதைக் கண்டிருக்கிறார் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

ஸ்ரீநிவாஸ் மற்றும் ஹர்னிஷ் மரணத்தை கொலையைக் கண்டித்து அமெரிக்க வாழ் இந்திய மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அமெரிக்காவில் தொடரும் இந்த நிறவெறித் தாக்குதல்கள் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

அடுத்த செய்தி