ஆப்நகரம்

ஆங்கில சொற்களில் பிழையை கண்டுபிடித்து உயரிய பரிசு பெற்ற இந்திய சிறுமி!

அமெரிக்காவில் நடந்த ஆங்கில சொற்களில் உள்ள பிழையை நீக்கும் போட்டி நடந்தது.

TOI Contributor 2 Jun 2017, 6:56 pm
அமெரிக்காவில் நடந்த ஆங்கில சொற்களில் உள்ள பிழையை நீக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய வம்சாவளியை சார்ந்த அனன்யா வினய் என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
Samayam Tamil indian origin student wins us scripps national spelling bee
ஆங்கில சொற்களில் பிழையை கண்டுபிடித்து உயரிய பரிசு பெற்ற இந்திய சிறுமி!


6 வயது முதல் 15 வயதுடையோருக்கான சொற்களில் உள்ள எழுத்து பிழையை கண்டுபிடிக்கும் போட்டியில், அமெரிக்காவின் பல்வேறு மாகணங்களிலிருந்து பத்து லட்சம் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களை எல்லாம் வெற்றி கொண்டு இந்திய வம்சாவளியினரான அனன்யா வினய் முதலிடம் பிடித்து அசத்தினார். இவர் 'Marocain’ (பட்டு அல்லது கம்பளியால் செய்யப்பட்ட துணி) என்ற வார்த்தைக்கு எழுத்து பிழை கண்டு பிடித்து, சரியான சொல்லை கூறி முதலிடம் பிடித்தார். இவருக்கு $40,000 (ரூ. 25.79 லட்சம்) பரிசு வழங்கப்பட்டது.



என்ன தான், அமெரிக்காவில் ஆங்கிலம் ஆண்டாண்டுகளாக தாய்மொழியாக பேசி வந்தாலும், இந்தியர்களை ஆங்கிலத்தில் வெல்ல முடியாத நிலை தான் உள்ளது. ஒவ்வொரு வருடமும் நடக்கும் இந்த போட்டியில் அதிகபட்சம் இந்திய வம்சாவளியினர் வெல்வது தான் வழக்கமாக உள்ளது.

அடுத்த செய்தி