ஆப்நகரம்

ஆஸ்திரேலியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்!

விசா ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.

Samayam Tamil 9 Aug 2018, 6:21 pm
விசா ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.
Samayam Tamil 10


இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனர். இதில் 22 பேர் சமர்பித்திருந்த சான்றிதழ்கள் போலியானவை என தெரிகிறது. இதை ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடிக்க அவர்களின் விசாவை ரத்து செய்தனர்.

இதனால் அவர்கள் உடனடியாக திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் கோவை மாவட்ட தனியார் ஏஜென்சிகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் அசல் சான்றிதழ்களை கொடுத்துள்ளனர். ஆனால் தனியார் நிறுவனத்தினர் போலியாக சான்றிதழ்களை வழங்கி அனுப்பிவிட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் தவித்து வரும் மாணவர்களை இந்திய தூதரகம் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி