ஆப்நகரம்

ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா?

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என பலகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தாண்டு ஐ.நா. சபையில் இடம் கிடைக்கும் என ஆவலோடு இந்தியா உள்ளது.

TOI Contributor 28 Jul 2016, 5:53 pm
நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என பலகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தாண்டு ஐ.நா. சபையில் இடம் கிடைக்கும் என ஆவலோடு இந்தியா உள்ளது.
Samayam Tamil indias un security council permanent seat hope receives setback
ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா?


உலக அமைதியை பேணும் நோக்கமாக 1945ல் தொடங்கப்பட்ட ஐ.நா. சபை 5 நிரந்தர உறுப்பினர் நாடுகள் மற்றும் அவ்வப்போது தேர்ந்தெடுக்கப்படும் 6 பாதுகாப்பு உறுப்பு நாடுகளோடும் உருவாக்கப்பட்டது. அதில் 51 உறுப்பு நாடுகள் இடம் பெற்றிருந்தன.

தற்போது 193 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐ.நா. சபையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நிலையில் பாதுகாப்பு நாடுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்த வேண்டும் என ஜெர்மனி, இந்தியா போன்ற நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாதுகாப்பு உறுப்பினர்கள் சபையை விரிவுபடுத்துவது தொடர்பாக அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. இதனால் ஐ.நா. சபையில் இடம்பெறும் இந்தியாவின் கனவு இந்த ஆண்டும் நிறைவேறாது என தெரிகிறது.

அடுத்த செய்தி