ஆப்நகரம்

இந்தோனேசியாவில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 1,600ஆக உயா்வு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிாிழந்தோா் எண்ணிக்கை 1,600 ஆக உயா்ந்துள்ளது.

Samayam Tamil 6 Oct 2018, 7:46 pm
இந்தோனேசியாவில் கடந்த வாரம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கிய நிலையில் அங்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்களுக்கு அதிகாாிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
Samayam Tamil Indonesia Tsunami 1


இந்தோனேசியாவில் கடந்த வாரம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அங்கு சுனாமி தாக்கியது. இந்த பேரிடரில் சிக்கி உயிாிழந்தோா் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளது. சுனாமி தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பலு நகரத்தில் உள்ள பெடோபா மற்றும் பல்லோரா ஆகிய நகரங்கள் வரைபடத்தில் இருந்து அழிந்து விட்டதாக தொிவித்துள்ளனா். மேலும் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் பிணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். இதனால் அங்கு நோய் தொற்று மற்றும் மாசு உருவாகும் வாய்ப்பு உள்ளதாக பலு நகர மக்களை அதிகாாிகள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாாிகள் கூறுகையில், சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பலு நகரத்தில் இன்னும் சடலங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அத்தகைய சடலங்கள் மீட்புக் குழுவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. நாங்கள் எங்கள் குழுவினருக்கு தடுப்பூசிகளைச் செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் மாசு ஏற்படலாம். இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படலாம் என்று தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி