ஆப்நகரம்

ஆப்கன் குடியேறிகளுக்கு ஆப்பு- இந்தோனேசியா அரசு செய்யும் அதிரடியைப் பாருங்க!

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் வேலையில் இந்தோனேசிய அரசு ஈடுபட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2019, 5:56 pm
உள்நாட்டு கலவரம் காரணமாக பல்வேறு நாடுகளை நோக்கி பொதுமக்கள் படையெடுப்பது வழக்கம். ஆனால் அவர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காததால், சட்டவிரோதமாக தங்கும் சூழல் ஏற்படுகிறது.
Samayam Tamil Afghan migrants


இதற்கு அந்நாட்டு அரசுகள் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி, மீண்டும் மக்களுக்கு சிரமத்தில் ஆழ்த்தி விடுகின்றன. அந்த வகையில் இந்தோனேசிய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மூன்று இந்திய வம்சாவளிக்கு இங்கிலாந்து அமைச்சரவையில் இடம்!

அந்நாட்டில் 35 ஆப்கன் குடியேறிகள் தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பதிலளித்துள்ள குடியேற்ற தடுப்பு மைய தலைமை அதிகாரி, இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

பூமிக்கு ஆபத்து...! நெருங்கி வரும் மூன்று பெரிய விண்கற்கள்

பாலி வழியாக ரியா மாகாணத்திற்கு வந்துள்ளனர். பின்னர் மகாக்கா நீரிணை வழியாக மலேசியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களை தற்போது குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைத்துள்ளோம்.

வசமாக சிக்கிக் கொண்ட தமிழர்கள் - கெடு விதித்த மலேசிய அரசு!

விரைவில் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர். ஆனால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட நபர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி