ஆப்நகரம்

ரத்தம் பாக்காம விடமாட்டாங்க போல.... அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்!!

ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் மீண்டும் இன்று (ஜனவரி 12) தாக்குதல் நடத்தியுள்ளது.

Samayam Tamil 12 Jan 2020, 11:11 pm
ஈராக் தலைநகரான பாக்தாத்தில் விமான நிலையம் அருகே, அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதியான காசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டார்.
Samayam Tamil ரத்தம் பார்க்காம விடமாட்டங்க போல.... அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்


தமது இந்த ராணுவ நடவடிக்கை அமெரிக்கா நியாயப்படுத்தியது. ஆனால், தங்களது ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று ஈரான் கூறி கொண்டே வந்தது.

சொன்னதைப் போன்றே, சுலைமானியின் இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரத்திலேயே ஈராக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

ஈரான் தாக்குதலில் சிதறிப்போன அமெரிக்கா, 80 ராணுவ வீரர்கள் பலி...

இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 80 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 200 வீரர்கள் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு தெரிவித்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தார்.

இருப்பினும் இதன் காரணமாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவாகிவிடுமோ, அப்படி போர் மூண்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் இன்றிரவு மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல் -பலாத் ராணுவ தளத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் ராணுவ அதிகாரத்தைப் பறிக்க, பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

இத்தாக்குதலின்போது ராணுவ தளத்தின் மீது ஏழு ராக்கெட் குண்டுகள் விழுந்ததாகவும், இதில் ஈராக் ராணுவ வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலால், அமெரிக்கா -ஈரான் இடையே சில நாட்களாக தணிந்திருந்த போர் பதற்றம் மீண்டும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி