ஆப்நகரம்

ஈராக் கார் குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ஈராக்கில் உள்ள வணிக வளாகம் அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210ஐ தாண்டியது.

TNN 5 Jul 2016, 1:29 pm
பாக்தாத்: ஈராக்கில் உள்ள வணிக வளாகம் அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210ஐ தாண்டியது.
Samayam Tamil iraq car bomb blast dead toll increases
ஈராக் கார் குண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு


ஈராக்கின் காராடாவில் உள்ள வணிக வளாகப் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவு ஏராளமான பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் அருகிலுள்ள கட்டடங்கள் குலுங்கின.

மேலும் ஏராளமான கடைகள் எரிந்து நாசமாகின. இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 210ஐ தாண்டியுள்ளது. படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஹைதர் அல் அபாதி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

அடுத்த செய்தி