ஆப்நகரம்

இம்சை கொடுக்க வரும் 'இர்மா' புயல்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

TNN 10 Sep 2017, 3:32 pm
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இர்மா புயல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil irma hurricane to lash florida
இம்சை கொடுக்க வரும் 'இர்மா' புயல்!


இர்மா, புளோரிடாவைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 193 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. இதனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என்றும் உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்குச் செல்லுங்கள் என்றும் புளோரிடா ஆளுநர் ரிக் ஸ்காட் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே, மின் இணைப்பு பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டுவிட்டது. மியாமி மற்றும் ப்ரோவார்டு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இர்மா புயலால் கியூபாவின் வடகிழக்குப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கியூபா நிலை குலைத்த இர்மா வலு குறைந்துள்ளதாக கருதப்பட்டாலும் புளோரிடாவை நெருங்கும் போது பலமடையக்கூடும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி