ஆப்நகரம்

பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்- சிங்கள நாளிதழ் செய்தியால் பரபரப்பு

கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், உயிரோடு இருப்பதாக, சிங்கள நாளிதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 17 Mar 2016, 8:29 pm
கடந்த 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், உயிரோடு இருப்பதாக, சிங்கள நாளிதழ் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil is pottu amman alive
பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்- சிங்கள நாளிதழ் செய்தியால் பரபரப்பு

அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில், 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் இறுதிக்கட்டத்தில் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் தமிழகத்தில், 'குருடீ' என்ற பெயரில், அவரது மனைவியுடன் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக, இலங்கை ராணுவத்தினர் அறிவித்த போதும், அவர் சடலம் மீட்கப்படவில்லை. அவர் இறந்ததற்கான உறுதியான சாட்சியங்களை, இந்தியாவிடம், இலங்கை அரசு இதுவரை வழங்கவில்லை. இது மர்மமாக உள்ளது.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி