ஆப்நகரம்

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபிற்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு!

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 19 Sep 2018, 4:19 pm
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவரது மகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil NawaZ Sharif


பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப், பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கினார். இதையடுத்து அவரது பிரதமர் பதவியை பறித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரிஃபிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மேலும் ரூ.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அவரது மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள், மருமகன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

தங்கள் மீதான வழக்கை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அதில் நவாஸ் ஷெரிஃப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க இடைக்கால உத்தரவிடப்பட்டது.

மேலும் உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Islamabad High Court has suspended jail terms of former Pak PM Nawaz Sharif, his daughter Maryam Nawaz and son-in-law Captain (retd) Muhammad Safdar in Avenfield case.

அடுத்த செய்தி