ஆப்நகரம்

உருவானது இவாங்கா ஆர்மி, மீம்ஸ்களால் அதிர விடும் நெட்டிசன்கள்...

ட்ரம்ப் இந்திய வருகையின்போது, அவருடன் வந்திருந்த அவரது மகள் இவாங்கா ட்ரம்ப் தன்னை நாடு முழுவதும் எடுத்துச் சென்றதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Mar 2020, 3:36 pm
கொரோனா தொற்று அச்சத்திற்கு இடையே, இந்தியாவைக் கடந்த வாரம் உலகமே உற்று கவனித்து வந்தது. இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையே காரணம். ட்ரம்ப் இந்திய வருகையின்போது, அவருடன் அவர் மனைவி மெலானியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
Samayam Tamil 1111


இந்தியாவில் கையெழுத்தாகப் போகும் வத்தக ஒப்பந்தங்கள் குறித்து உலக நாடுகள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது இந்திய மக்கள் ட்ரம்ப் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ஆகியோரின் வயது, உயரம், கணவர், தொழில் என இருவரின் சுய விவரங்கள் குறித்து இணையத்தில் தேடி வந்தனர்.


இதனிடையே ட்ரம்ப் குடும்பம் இந்தியாவில் தாஜ் மஹாலுக்கு நேரில் சென்று சுற்றிப் பார்த்தது. தாஜ் மஹாலை ட்ரம்ப் குடும்பம் சுற்றி பார்த்துக் கொண்டிருந்ததை இந்தியச் செய்தி சேணல்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன. இந்தியர்கள் இந்த நிகழ்வுகளை ஆர்வத்துடன் பார்த்தும் வந்தனர் என தரவுகள் மூலம் அறிய முடிகிறது.


இந்த தாஹ் மஹால் சுற்றிப் பார்க்கும் நிகழ்ச்சியின்போது ட்ரம்ப், மெலியானா சேர்ந்த எடுத்தப் போட்டோக்கள், இவாங்கா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகின. குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்த இவாங்கா ட்ரம்ப் புகைப்படம் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டது.

காவி தீவிரவாதம், கண்டுகொள்ளாத ட்ரம்ப், டெல்லி போலீஸ்... எழும் கேள்விகள்!

தாஹ் மஹால் தெரிவதுபோல் கல் மேடை ஒன்றில் தனது கணவருடன் அமர்ந்திருக்கும் இவாங்கா போட்டோ பலர் விரும்பும் போட்டோவாகவே மாறியது. அந்த போட்டோவை எடிட் செய்த நெட்டிசன்களில், அதிலிருந்து இவாங்காவின் கணவரை நீக்கிவிட்டனர்.


அதோடு தாங்கள் அமர்ந்திருப்பது போல எடுத்த புகைப்படங்களை அந்த படத்துடன் சேர்த்து வைத்து இணையத்தில் பதிவிட்டு வந்தனர். சிலர் இவாங்காவிற்கு ட்விட்டரில் இந்த படங்களை டேக் செய்தும் வைத்தனர். இதற்கு ட்விட்டரிலே பதிலளித்துள்ள இவாங்கா, “இந்திய மக்களின் அரவனைப்பை நான் பாராட்டுகிறேன். எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்” எனக் கூறியிருந்தார்.


குறிப்பாக ஹிந்தி பாப் பாடகர் தில்ஜிட் தோசாஞ் தனது போட்டோவை இவாங்காவோடு சேர்த்து போட்டோஷாப் செய்து அந்த போட்டோவை இவாங்காவிற்கு டேக் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்திருக்கும் இவாங்கா, “தாஜ் மஹாலை மற்றொரு பரிமாணத்திலிருந்து பார்க்கச் செய்ததற்கு நன்றி. இந்த அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று...” என்றிருக்கிறார்.

அடுத்த செய்தி