ஆப்நகரம்

பிரான்ஸ் பிரதமர் ராஜினாமா... புதிய பிரதமர் இவர்தான்!

பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 3 Jul 2020, 7:18 pm
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எட்வர்ட் பிலிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil ஜீன் கேஸ்டெக்ஸ்


பிரான்ஸ் நாடு கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பிரான்ஸ் பொருளாதாரமே சீரழிந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கிறது. இக்காலத்தில் பிரான்ஸ் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இமானுவேல் மெக்ரன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இதன் முதற்கட்டமாக புதிய பிரதமராக ஜீன் கேஸ்டெக்ஸை தேர்வு செய்துள்ளார். இவர் அடுத்த ஆட்சியை அமைப்பார் என எலிஸீ அரண்மனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. எட்வர் பிலிப் நேற்று அதிபர் இமானுவேல் மெக்ரனை சந்தித்து அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக எட்வர்ட் பிலிப் செய்த சிறப்பான பணிக்கு இமானுவேல் மெக்ரன் பாராட்டு தெரிவித்துள்ளார். மற்ற அமைச்சர்களும் விரைவில் மாற்றியமைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக, உள்துறை அமைச்சர் மீது மக்களுக்கு ஏராளமான விமர்சனங்கள் இருப்பதால் அவர் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜீன் கேஸ்டெக்ஸ் (55) அரசு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பின்னர் பிரெஞ்சு அரசியலில் மைய வலது அரசியல்வாதியாக பணியாற்றினார். பிரான்ஸில் கொரோனா ஊரடங்கை படிப்படியாக வெற்றிகரமாக தளர்த்திய பெருமை அனைத்தும் இவரையே சேரும்.

அடுத்த செய்தி