ஆப்நகரம்

உலக அளவில் சிறந்த தலைவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி!

உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளது

Samayam Tamil 20 Apr 2018, 7:19 am
உலகின் சிறந்த தலைவர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளது
Samayam Tamil ambani happy


அமெரிக்காவில் வெளியாகும் ஃபார்ச்சூன் பத்திரிகை, உலக அளவில் உள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், விஞ்ஞானிகள் என பல்துறைகளில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறதுஉ

இந்நிலையில், 2018 இந்தாண்டுக்கான சிறந்தவர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்து. அதுில், 2018ம் ஆண்டுக்கான உலகின் 50 சிறந்த தலைவர்கள் பட்டியிலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் இந்திரா ஜெய்சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளது

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு 24 வது இடமும், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான இந்திரா ஜெய்சிங்கிற்கு 20 வது இடமும் கிடைத்துள்ளது.

இந்திரா ஜெய்சிங்கை பற்றி அந்த பத்திரிகை குறிப்பிடுகையில், இவர் இந்தியாவில் உள்ள ஏழைகளின் குரலாக ஒலித்து வருவதாகவும், அநீதிக்கு எதிரான போராட்டத்தில் தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர் போபால் விஷ வாயு கசிவு சம்பவத்துக்கு போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல், முகேஷ் அம்பானியைப் பற்றி ஃபார்ச்சூன் பத்திரிகை கூறுகையில், இந்தியாவில் மிகக்குறுகிய காலக்கட்டத்தில் ஜியோ நிறுவனம் மூலம் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி