ஆப்நகரம்

நாளை முதல் இதெல்லாம் மாறப்போகுது.. அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன்

அதிபராக பதவியேற்றதும் ஜோ பைடன் அதிரடியாக மேற்கொள்ள இருக்கும் மாற்றங்கள்.

Samayam Tamil 20 Jan 2021, 7:46 pm
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இந்நிலையில், இன்று (ஜனவரி 20) ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கிறார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கவிருக்கிறார்.
Samayam Tamil joe biden plans to scrap these decisions by donald trumps administration on day one
நாளை முதல் இதெல்லாம் மாறப்போகுது.. அமெரிக்க அதிபராகும் ஜோ பைடன்


​ட்ரம்பின் முடிவுகள் ரத்து

ஜோ பைடன் அதிபரானதும் ட்ரம்ப் ஏற்கெனவே எடுத்துள்ள முடிவுகளை அதிரடியாக ரத்து செய்யவிருக்கிறார். அவற்றை பற்றி பார்க்கலாம். பதவியேற்ற முதல் நாளிலேயே இதுவரை எந்த அதிபரும் கையெழுத்திடாத அளவுக்கு பல்வேறு உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறுகின்றனர்.

​உலக சுகாதார அமைப்புடன் உறவு

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த மே மாதம் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். உலக சுகாதார அமைப்பு மீது சீனா அதிக அழுத்தமும், அதிகாரமும் செலுத்துவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், உலக சுகாதார மையத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவுக்கு புத்துயிர் கொடுக்க பைடன் ஏற்பாடு செய்துள்ளார்.

​மாஸ்கிற்கு முக்கியத்துவம்

கொரோனா காலகட்டத்தில் மாஸ்க் போடாமல் அலட்சியம் காட்டுவதாக டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இப்போது பைடன் ஆட்சிக்கு வந்தபிறகு அமெரிக்க அரசின் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதும் கட்டாயம் என உத்தரவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

​மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

பெடரல் மாணவர் கடன்களுக்கான வட்டி மற்றும் அசல் கட்டணங்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க ஜோ பைடன் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் அமெரிக்கா வருவதற்கு டொனால்ட் ட்ரம்ப் அரசு தடை விதித்துள்ளது. இதை ஜோ பைடன் பலமுறை விமர்சித்துள்ளார். இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கான பயணத் தடையை நீக்க ஜோ பைடன் கையெழுத்திடவுள்ளார்.

​பாகுபாட்டை ஒழிக்க நடவடிக்கை

அலுவலகங்களில் பாலின அடிப்படையில் இழைக்கப்படும் பாகுபாடுகளையும், அநீதிகளையும் தடுப்பதற்கான உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்திட இருக்கிறார்.

அடுத்த செய்தி