ஆப்நகரம்

மாட்டிறைச்சியை விண்வெளிக்கு கடத்திச் சென்ற வீரர் மரணம்!

அமெரிக்க விண்வெளி வீரரும், மாட்டிறைச்சியை விண்வெளிக்கு கடத்திச் சென்றவருமான ஜான் யங் தனது 87வது வயதில் காலமானார்.

Samayam Tamil 7 Jan 2018, 4:56 pm
அமெரிக்க விண்வெளி வீரரும், மாட்டிறைச்சியை விண்வெளிக்கு கடத்திச் சென்றவருமான ஜான் யங் தனது 87வது வயதில் காலமானார்.
Samayam Tamil john young who led first space shuttle mission dies at 87
மாட்டிறைச்சியை விண்வெளிக்கு கடத்திச் சென்ற வீரர் மரணம்!


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தைச் சேர்ந்த வீரர் ஜான் யங். நாசா 1969ஆம் ஆண்டு, அப்பலோ 10 விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பிய போது வீரர் ஜான் யங், பரிசோதனை அடிப்படையில் விண்கலத்தில் சென்றார். ஆனால் அந்த விண்கலம் சந்திரனில் தரையிறங்கவில்லை. இதனையடுத்து நாசா, 2 மாதங்கள் கழித்து அப்பலோ 11 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியது.

இதன்மூலம் சந்திரனுக்கு இரண்டு முறை பயணம் செய்தவர் என்ற பெருமையை ஜான் யங் பெற்றார். இவர் ஜெமினி, அப்பலோ, ஸ்பெஷல் ஷட்டில் உள்ளிட்ட விண்கலங்கள் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார்.

அப்போது மாட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சை விண்வெளிக்கு கடத்திச் சென்றதாக இவர்மீது புகார் எழுந்தது. பல சாதனைகளை படைத்த விண்வெளி வீரர் ஜான் யங் தனது 87வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு நாசா விண்வெளி மையம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி