ஆப்நகரம்

சுற்றுலா வந்த பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரழந்தார்

விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரிட்டன் பத்திரகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 16 Sep 2017, 12:13 am
விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரிட்டன் பத்திரகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil journalist killed by python
சுற்றுலா வந்த பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரழந்தார்


லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியஸ் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் பணிபுரிபவர் பால் மெக்லன். பிரட்னைச் சேர்ந்த இவர், விடுமுறையில் இலங்கைக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்துள்ளார்.

நேற்று மதியம் பனாமா கடற்கரைக்குச் சென்ற அவர், அங்குள்ள கடல் பகுதியை ஒட்டியை நீர்நிலையில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த முதலை ஒன்று அவரை கடித்து கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் பதறியடித்த அவரது நண்பர்கள், சம்பவத்தை குறித்து மீட்புக்குழுவினர்க்குத் தகவல் தெரிவித்தனர். கடலுக்குள் இறங்கிய மீட்புக்குழுவினர், பால் மெக்லனை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பால் மெக்லனின் உடல், அருகிலிருந்த சகதிக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விடுமுறையில் சுற்றுலா வந்த பால் மெக்லன் முதலை கடித்து உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினர் மற்றும் அலுவலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி