ஆப்நகரம்

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 40 போ் பலி

ஆப்கானிஸ்தானின் ஓட்டல் ஒன்றில் தாலிபான் அனைப்பினா் நடத்திய திடீா் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 40 போ் உயாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Jan 2018, 9:47 pm
ஆப்கானிஸ்தானின் ஓட்டல் ஒன்றில் தாலிபான் அனைப்பினா் நடத்திய திடீா் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 40 போ் உயாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil kabul intercontinental hotel siege leaves more than 40 dead afghanistan official says
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் 40 போ் பலி


ஆப்கானிஸ்தான் தலைநகாில் அமைந்துள்ள ஓட்டல் ஒன்றில் சனிக்கிழமை இரவு தாலிபான் அமைப்பினா் திடீரென நுழைந்து தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினா். 4 தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40க்கும் அதிகமான மக்கள் உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகாில் வெளிநாட்டு மக்கள், சுற்றுளா பயணிகள் அதிகம் தங்கியிருக்கக்கூடிய விடுதியில் தாலிபான் அமைப்பினா் 4 போ் துப்பாக்கியுடன் தாக்குதலில் ஈடுபட்டனா். இதனையடுத்து அந்நாட்டு பாதுகாப்புத்துறையினா் மேற்கொண்ட மீட்பு பணியில் 150க்கும் அதிகமான நபா்களை அவா்கள் காப்பாற்றினா்.

தீவிரவாதிகள் பதுங்கி உள்ள ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சிலரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். காபூலில் உள்ள ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி