ஆப்நகரம்

அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராகும் இந்திய வம்சாவளி பெண்!!

அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை, அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 12 Aug 2020, 8:24 pm
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களம் இறங்கியுள்ளார்.
Samayam Tamil kamala harris


அத்துடன், துணை அதிபர் பதவிக்கு ஒரு பெண்ணை வேட்பாளராக முன்நிறுத்துவேன் என்று ஏற்கெனவே அவர் உறுதி அளித்திருந்தார். இதையடுத்து, துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிபோர்னியா மாகாண செனட் சபை உறுப்பினர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்தப் போட்டியில் இருந்தனர்.

இந்நிலையில், "ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை நிறுத்துவேன்" என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

White House Shot: காதில் ரகசியம் சொன்ன காவலர்; பாதியில் ஓட்டம் பிடித்த அமெரிக்க அதிபர் - என்ன நடந்தது?

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் கமலா ஹாரீசை துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.

"தம்மை துணை அதிபர் வேட்பாளராக ஜோபிடன் அறிவித்துள்ளது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்" என தமது ட்விட்டர் பதிவில் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி